இன்று தொடங்குகிறது +2 பொதுத்தேர்வு: கோவையில் 119 தேர்வு மையங்களில் 35,033 மாணவர்கள் தேர்வெழுகின்றனர்..!!
Author: Rajesh5 May 2022, 9:11 am
கோவை: கோவையில் 119 தேர்வு மையங்களில் 35033 பிளஸ்+2 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடமாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு வெற்றிகரமாக பொதுத் தேர்வை நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
பிளஸ் டூ பொதுத் தேர்வுகளை எழுதுவதற்காக கோவை மாவட்டத்தில் 119 தேர்வு மையங்கள் தயார் படுத்தி உள்ள நிலையில் 35033 பிளஸ்+2 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தொடர்ந்து கோவை மாவட்ட பள்ளிகளில் பிளஸ்+2 பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி வருகின்றனர்.
அதே போல தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டனர்.தொடர்ந்து தேர்வு மையங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையே ஆறடி இடைவெளியில் அமர்ந்து தேர்வு எழுதுகின்றனர்.