விவசாய பயிர் கடன் தள்ளுபடி… எடப்பாடியாரின் அறிவிப்பை கொண்டாடும் கோவை அதிமுக..!!!

5 February 2021, 8:05 pm
Chandrasekar 4- updatenews360
Quick Share

கோவை : விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை, கோவை மாவட்ட அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், முக்கியமானது ரூ. 12,110 கோடி தமிழக விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்வதாக வெளியிட்ட அறிவிப்புதான். இந்த அறிவிப்பு விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் முதலமைச்சரின் இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவையில் இந்த கொண்டாட்டம் களைகட்டியது. வடவள்ளி பகுதியில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் திரு. Er. R.சந்திரசேகர் தலைமையிலான அதிமுகவினர், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Views: - 1

0

0