கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறிய 122 பேர் கைது..!

26 March 2020, 8:29 am
Quick Share

கோவை: கோவை மாவட்டம் முழுவதிலும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 122 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொரோனா அச்சுறுத்தலால் ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவையில் இந்த உத்தரவை மீறி வெளியில் சுற்றி திரிந்ததாக 122 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதன்படி, கோவை மாநகரில் 144 தடை உத்தரவை மீறியதாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 35 பேர் கைது செய்யப்பட்டனர். புறநகர் மாவட்டத்தில் 69 வழக்குகள் பதிவு செய்ய பட்டு 87 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 122 பேர் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.