சட்டசபை தேர்தல் 2021 : கோவை வேட்பாளர்களும்.. அரசியல் கட்சிகளின் பிளேனும்..! ஒரு பார்வை..!

8 September 2020, 5:02 pm
Election - updatenews360
Quick Share

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் தடபுடலாக செய்ய வேண்டிய அரசியல் பணிகள் அனைத்தும் சைலண்டாக நடைபெற்று வருகிறது. ஆனால், அ.தி.மு.க., தி.மு.க., என அனைத்து அரசியல் கட்சிகளும், கூட்டணி, தொகுதி உடன்பாடு உள்ளிட்டவற்றை பற்றி பேச ஆரம்பித்து விட்டன. மேலும், மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களும் தங்களுக்கு நெருக்கமான நிர்வாகிகளை வேட்பாளர்களாக களமிறக்க அந்தந்த கட்சியின் தலைமையில் முகாமிட்டும், ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மத்தியில் ஆட்சியை பிடிக்க உத்தரபிரதேசத்தில் முன்னதாக நடக்கும் சட்டசபை தேர்தலில் வென்றாக வேண்டிய கட்டாயம் எப்படி தேசிய கட்சிகளுக்கு இருக்கிறதோ, அதுபோலத் தான் புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றும் முதலமைச்சர் யார் என்பதை தீர்மானிப்பது கோவை மாவட்டம் என்ற ஐதீகமும் உண்டு.

EPS - stalin - updatenews360

கடந்த சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் சிங்காநல்லூரை தவிர்த்து ஏனைய 9 தொகுதிகளில் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றது. இதன்பலனாக, ஆட்சியையும் பிடித்தது.

எனவே, இந்த முறை கோவை மாவட்டத்தில் எப்படியாவது பெரும்பாலானா தொகுதிகளை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் திட்டம் தீட்டி வருகின்றன. இதற்காக, அண்மையில் இரு கட்சிகளும் நிர்வாகிகளை அதிரடியாக மாற்றம் செய்து, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.

தி.மு.க.வை பொறுத்தவரையில் உட்கட்சி பூசல் அதிகரித்து காணப்படுவதால், தனது சொந்த கட்சி வேட்பாளர்களை களமிறக்கினால் பலனில்லை என்பதை உணர்ந்து, கோவையின் முக்கிய தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டு, வேடிக்கை பார்க்க உள்ளது.

அதேவேளையில், கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை உணர்ந்துள்ள அக்கட்சியின் தலைமை, கோவையில் மீண்டும் சொந்த கட்சி வேட்பாளர்களை களமிறக்கும் முடிவில் உள்ளது. எனவே, கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளிடையே பெரும்பாலும் போட்டியாக இருக்கும் என்றே தெரிகிறது.

அந்த வகையில், கோவையின் முக்கிய தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி சார்பில் களமிறக்கப்படும் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.

Cbe MLA prg - edappadi palanisamy - updatenews360

கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சித் துறை அமைச்சரின் நெருங்கிய நண்பரும், எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.ஜி. அருண்குமாரை களமிறக்கப் போவதாகவும், அவருக்கு எதிராக கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமமூர்த்தியை போட்டியிடச் செய்ய தி.மு.க. திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல, கோவை (தெற்கு) தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனனை மீண்டும் வேட்பாளராக அறிவிக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்கள் கூறுகின்றன. இவரை எதிர்த்து, தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸின் மயூரா ஜெயக்குமாரை களமிறக்க திட்டம் தீட்டப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

கோவை வடக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக கோவை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான சந்திரசேகரை களமிறக்க இருப்பதாக கூறப்படுகிறது. தனது அறக்கட்டளையின் மூலம் கொரோனா காலத்தில் செய்த பல்வேறு நலத்திட்டங்களினால், மக்களிடையே அதிகம் பிரபலமடைந்த நிலையில், இவரை களமிறக்க அ.தி.மு.க. முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. சந்திரசேகரின் மனைவி டாக்டர் ஷர்மிளா, கோவை மாநகர மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

chandrasekar - cr ramachandran - updatenews360

அ.தி.மு.க. வேட்பாளராக சந்திரசேகருக்கு எதிராக தி.மு.க.வின் சி.ஆர். ராமச்சந்திரனை களமிறக்க தி.மு.க. முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தின் நிலை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…!

Views: - 1

0

0