கோவை நீதிமன்றத்தில் நாளை முதல் சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.. முதன்மை நீதிபதி தொடங்கி வைக்கிறார்

Author: Babu Lakshmanan
7 April 2022, 7:42 pm
Quick Share

கோவை நீதிமன்றத்தில் சமரச தீர்வு மையம் நாளை முதல் நடைபெறுகிறது

கோவை: கோவை நீதிமன்றத்தில் சமரச தீர்வு மையம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை முதல் வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற சமரச தீர்வு மைய வழி சாட்டுதல்படி, கோவை மாவட்ட சமரச தீரவு மையம் சார்பில் வருகிற 9ம் அன்று தேசிய சமரச தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சின் ஒரு பகுதியாக நாளை (8ம் தேதி) முதல் 13ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு நீதிமன்ற வளாகம் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் வழக்கப்படுகிறது.

தொடர்ந்து சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு சமரச தீர்வு மையத்தின் செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் பற்றி விளக்கும் விழிப்புணர்வு வகுப்புகள் மற்றும் விழிப்புணர்வு நாடகம் நடைபெறுகிறது.

9ம் தேதி தேசிய சமாரச தினம் அனுசரிக்கும் விதமாக நீதிபதிகள், வக்கீல்கள், சட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பங்குபெறும் விழிப்புணர்வு பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி சக்திவேல் தொடங்கி வைக்கிறார்.

பேரணி கோர்ட்டு வளாகத்தில் தொடங்கி ரேஸ்கோர்ஸ், அரசு மருத்துவமனை ரயில் நிலையம் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வழியாக வந்து மீண்டும் நீதிமன்ற வளாகத்தை வந்தடைகிறது. மேலும் 11,12,13ம் தேதிகளில் விழிப்புணர்வு குறுப்படங்கள் பல்வேறு இடங்களில் ஒளிப்பப்பபடவுள்ளது.

Views: - 872

0

0