கோவையில் 13 ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்!!
9 September 2020, 1:37 pmகோவை : கோவை மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருதினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று வழங்கினார்.
பள்ளிக்கல்வித் துறையில் சிறந்து கற்பித்தலை வழங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம்.
இந்த சூழலில், கோவை மாவட்டத்தில் இந்த விருதுக்காக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு நல்லாசிரியர் விருது என்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அதன்படி, கோவையில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 13 பேருக்கு நல்லாசிரியர் விருதினை அமைச்சர் எஸ் பி வேலுமணி வழங்கினார். மேலும் கற்பித்தலுக்கான காணொளி பாடங்களை சிறப்பாக தயாரித்த 3 ஆசிரியர்களுக்கும் சிறப்பு விருதுகளை வழங்கினார்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்கு என்று பிரத்யேக ஆம்புலன்ஸ்களைத் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் ராசாமணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
0
0