‘கோவையில் குளங்களின் இயல்பு தோற்றத்தை மாற்ற வேண்டாம்’ – சூழலில் ஆர்வலர்கள் கோரிக்கை

12 August 2020, 9:01 am
Quick Share

கோவையில் உள்ள பறவைகளின் சரணாலயமாக கருதப்படும் குளங்களின் இயல்பு மாறாமல் சீரமைக்க வேண்டும் என சூழலில் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நொய்யல் ஆற்றை விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமய மாக்கல் திட்டத்திற்காக அரசு ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன் கீழ், கோவையில் உள்ள 18 அணைக்கட்டுகள், 22 குளங்களை் உள்ளிட்டவை தூர்வாரி, சீரமைக்கும் பணிகள் விரைவில் நடைபெறவுள்ளன.

இதன் ஒரு பகுதியாக அங்குள்ள ஆச்சான்குளம், பள்ளபாளையம் குளம், வெள்ளலூர் குளம் உள்ளிட்ட குளங்களின் கரைகளைப் பலப்படுத்தும் நோக்கில், கான்கிரீட் சுவர் அமைக் கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கு சூழலில் ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கரையோரம் உள்ள நாணல் புற்கள், புதர்களை அகற்றுவதால் குளங்களின் இயல்பு தொற்றம் மாற்றப்படுவதுடன் அதன் உயிர்ச் சூழல் மிக மோசமாக பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்

மேலும், தடுப்பணைகளை கான்கிரீட் மூலம் சீரமைப்பதில் தவறில்லை என குறிப்பிடும் அவர்கள், குளக்கரையில் இப்பணியை மேற்கொள்ளும்போது உயிர்ச்சூழல் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

அங்கு வாழக்கூடிய பூச்சிகள், புழுக்கள் அழிக்கப்படுவதால், அதை உணவாக உண்ண வரும் பறவைகள் பெரும் ஏமாற்றத்தை சந்திக்கும் என கூறியுள்ளனர்.

மேலும், ஆச்சான்குளம், பள்ளபாளையம் குளம், வெள்ளலூர் குளம் உள்ளிட்டவைகளில் வந்து தங்க வெளிநாடுகள் மற்றும் ஹிமாலயாஸ்போன்ற பகுதிகளில் இருந்தேல்லாம் பறவைகள் வருவதாகவும், அவற்றிற்கு இயற்கை மாறாத சூழலை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டுமின்றி சாம்பல் கதிர்க்குருவி போன்ற சிறிய பறவைகளுக்கு, நாணல் புற்கள், புதர்கள் கட்டாயம் தேவை. அவற்றை முழுமையாக அகற்றிவிட்டால் பாதிப்பு ஏற்படும் எனசூற்று சூழலியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.