கோவை ; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை காலில் போட்டு மிதித்தும், செருப்பால் அடித்தும், புகைப்படத்தை கிழித்தும் பா.ஜ.க மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினர்.
கோவை பந்தைய சாலை பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சனாதனத்தை பற்றி அவதூறாக பேசியதை கண்டித்து கோவை மாவட்டம் பா.ஜ.க சார்ப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைபடத்தை காலில் போட்டு மிதித்தும், செருப்பால் அடித்தும், புகைபடத்தை கிழித்தும் பா.ஜ.க மகளிர் அணி எதிர்ப்பு தெரிவித்தனர்.
மகளிர் அணி பெண்களுக்கும், காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பேசியதாவது:- அமைச்சர் உதயநிதி சனாதனத்தை பற்றி அவதூறு பேசிய போது, அமைச்சர் சேகர்பாபு கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தார். அதற்கு ஆதரவு தெரிவித்து பேசிய ஆ.ராசாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமைச்சர் சேகர்பாபு உதயநிதி பதவி விலகாவிட்டால் கண்டன ஆர்ப்பாட்டமானது, தமிழக முழுவதும் விஸ்வரூபமும் இருக்கும். இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கு நிகரான சம்பவம். அமைச்சர் உதயநிதி தற்குறித்தனமாக அலைந்து வருகிறார், எனக் குற்றம் சாட்டினார்.
தமிழ் சினிமாவின் ஆஸ்தான இயக்குநர்களின் இவருக்கு முக்கிய இடம் உண்டு. இவர் இயக்கி படம் எல்லாமே பட்டி தொட்டி எங்கும்…
போக்சோவில் கைதான ஜானி மாஸ்டர் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வருபவர் ஜானி மாஸ்டர். இவர்…
பார்வையற்ற 16 வயது சிறுமியை பெற்ற தந்தையும், 2 அண்ணன்களும் 3வருடமாக பாலியல் சித்ரவதை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்த இளைஞர் அஜித்குமார், போலீஸ் விசாரணையில் தாக்கப்பட்டதால் உயிரிழந்தார்.…
படுதோல்வியடைந்த தக் லைஃப் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், திரிஷா, சிம்பு, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரது…
மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…
This website uses cookies.