கோவை வாலாங்குளத்தில் படகு இல்லத்தில் அலைமோதும் கூட்டம் : படகுசவாரியில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள்…!!

Author: Babu Lakshmanan
1 September 2022, 9:28 am
Quick Share

கோவை : கோவை உக்கடம் பகுதியில் உள்ள வாலாங்குளத்தில் பொதுமக்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

கோவை மாநகர பகுதியில் உள்ள குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், வாலாங்குளம் சீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த குளக்கரையில் நடைபாதை செல்ல வசதிகள் செய்ய பட்டு உள்ளது.

அதுபோன்று படகுசவாரி வசதியும் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து, இங்கு படகு சவாரி தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 20 படகுகள் வைக்கப்பட்டு உள்ளன.

இதில் துடுப்பு படகு, 2 பேர் மற்றும் 4 பேர் செல்லும் மிதிபடகு, 8 பேர் செல்லும் மோட்டார் படகு, ஒருவர் மட்டும் செல்லும் வாட்டர் சைக்கிள் ஆகியன ஆகும். இந்த குளத்தில் படகு சவாரி தொடங்கப்பட்டு உள்ளதால் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து படகுகளில் சவாரி செய்து மகிழ்கிறார்கள்.இதன் காரணமாக அங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது.

அத்துடன் சிறுவர்கள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் இந்த வாலாங்குளத்தின் கரையில் பல்வேறு வகையான கடைகள் மற்றும் உணவகங்களும் திறக்கப்பட்டு உள்ளன. இதனால், மாலை நேரத்தில் இங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறும்போது ;- வாலாங்குளத்தில் 2 பேர் செல்லும் மிதிபடகு 30 நிமிடத்துக்கு ரூ.300-ம், 4 பேர் மிதிபடகுக்கு ரூ.350-ம், ஒருவர் மட்டும் செல்லும் வாட்டர் சைக்கிள் 15 நிமிடத்துக்கு ரூ.200, 8 பேர் செல்லும் மோட்டார் படகு 20 நிமிடத்துக்கு ரூ.1000 என கட்டணம் நியமிக்கப்பட்டு உள்ளது. தற்போது இதில் 20 சதவீதம் சலுகை வழங்கப்பட்டு உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை படகு சவாரி செய்து மகிழலாம், என்றனர்.

Views: - 278

0

0