இரண்டு காவலர்களுக்கு கொரோனா : கோவையில் சிபிசிஐடி அலுவலகம் மூடல்.!
16 August 2020, 6:05 pmகோவை : சிபிசிஐடி அலுவலகத்தில் இரண்டு போலீசாருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, சிபிசிஐடி அலுவலகம் மூடப்பட்டது.
கோவையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலில் கோவையில் பின்தங்கிய கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதன் வீரியத்தை காட்டி வருகிறது. பொதுமக்களை விட அரசு அதிகாரிகள், மக்களை காக்க போராடும் சுகாதாரத்துறையினர், காவல்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக காவலர்கள் கொரோனா தொற்றால் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் பல்வேறு காவல்நிலையங்கள் கொரோனா அதிகரிப்பால் மூடப்பட்டது. அந்த வகையில், கோவை இரண்டு போலீசாருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, சிபிசிஐடி அலுவலகம் மூடப்பட்டது.
மேலும் சிபிசிஐடி அலுவலகத்தில் பணிபுரிந்த 30 க்கும் மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் பணிபுரிந்து இரு காவலர்களுக்கு கொரோனா தொற்று பரவியதால் சக காவலர்கள் அச்சத்தில் உள்ளனர்.