கோவை : கோவை மத்திய சிறையில் செல்போன் பயன்படுத்தியதை ஜெயிலரிடம் சொன்னதால் கோவை மத்திய சிறையில் கைதிகள் மோதி கொண்டனர்.
கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விசாரணை மற்றும் தண்டனை கைதிகளாக உள்ளனர். இந்நிலையில், சிறை கைதி ஒருவர் செல்போன் பயன்படுத்தியதை சக கைதி மன்சூர் என்பவர் ஜெயில் வார்டனிடம் கூறியதாக தெரிகிறது.
இது தொடர்பாக மன்சூருக்கும், மற்ற சில கைதிகளுக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. இதை தொடர்ந்து நேற்று மன்சூர் முதல் பிளாக்கில் இருந்து புத்தகம் எடுப்பதற்காக வால்மேடு 3வது பிளாக்கிற்கு சென்றுள்ளார்.
அப்போது 5 கைதிகள் அவரை வழிமறித்து ‘நீ எப்படி ஜெயிலுக்கு உள்ளே செல்போன் பயன்படுத்துவதை ஜெயிலரிடம் சொல்லலாம்’ என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி மன்சூரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சிவக்குமார் என்பவர் கற்களால் தாக்கியதில், மன்சூருக்கு பின்தலை, நெற்றி உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த மற்ற கைதிகள் ஜெயில் வார்டனுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் தாக்குதலில் காயமடைந்த மன்சூர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜெயில் வார்டன் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சிவக்குமார், அன்னபாண்டி, ஷேக் முகமத், முனியாண்டி, பிரவீன் குமார் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மோதலில் ஈடுபட்ட சிறை கைதிகள் மீது தாக்குதல், கொலைமிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைக்குள் கைதிகள் மோதிக் கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.