கோவை – சென்னை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் : ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு :

19 October 2020, 4:25 pm
Chennai Kovai Train - Updatenews360
Quick Share

கோவை : ஆயுத பூஜை, தீபாவளியை ஒட்டி கோவை சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து இரயில்வே நிர்வாகம் தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரயில்களை ஊழியர்கள் தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை கோவை சதாப்தி சிறப்பு ரயில்கள் வருகிற 19ம் தேதி முதல் இயக்கப்படுகின்றன. அதன்படி சென்னை கோவை சதாப்தி ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தினம் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 7:10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு வந்தடையும்.

இதேபோல் கோவையிலிருந்து தினமும் செவ்வாக்கிழமை தவிர மாலை 3:05 மணிக்கு புறப்படும் சிறப்பு சதாப்தி ரயில் இரவு 10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் காட்பாடி ஜோலார்பேட்டை சேலம் ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

Views: - 0

0

0