கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் கோவை மாநகர காவல்துறை!!

5 September 2020, 1:55 pm
Cbe Corona Rally - Updatenews360
Quick Share

கோவை : கொரோனா விழிப்புணர்வு பிரசாரப் பணியில் கோவை மாநகர காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா நோயை கட்டுபடுத்தும் விதமாக கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரன் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் ஸ்டாலின் ( சட்டம் மற்றும் ஒழுங்கு) மேற்பார்வையில் வெகு தீவிரமாக பரவி வரும் கோவிட் 19 தொற்று நோய்
பரவாமல் தடுப்பது சம்மந்தமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கோவை மாநகர எல்லைக்குட்பட்ட மத்திய, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு உட்கோட்டங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மற்றும் தொற்று நோய் அதிகமுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் புதிதாக ரோந்து வாகனங்களை கொண்டு ஒலிபெருக்கி மூலம் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பொது மக்கள் கடைபிடிக்கும் விதமாக அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் முகக் கவசம் அணிதல் மற்றும் கைகளை அடிக்கடி சானிடைசர் மூலம் சுத்தம் செய்தல் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், கோவை மாநகர காவல் ஆணையளர் உத்தரவின் பேரில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிதாக ரோந்து வாகனங்கள் கொடுக்கப்பட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Views: - 6

0

0