“எளிமையான அமைச்சர்“.! குடியுரிமை தேர்வில் சாதனை படைத்த பார்வை மாற்றுத்திறனாளி மாணவி பெருமிதம்.!!

8 August 2020, 2:58 pm
Cbe IAS Holder Meet Minister - Updatenews360
Quick Share

கோவை : தமிழக உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும் கோவை அம்மா IAS அகடாடமியின் சேர்மன் எஸ் பி அன்பரசன் அவர்களை குடியுரிமை தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவி கோவையில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

அம்மா IAS அகாடமியில் பயின்ற மதுரையை சேர்ந்த கண்பார்வை இழந்த மாணவி பூர்ணசுந்தரி தேசிய அளவில் நடைபெற்ற குடியுரிமை தேர்வில் 286வது இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில் அம்மா IAS அகாடமிக்கு வருகை புரிந்த அவர், அகாடமியின் தலைவரும் நல்லறம் அறக்கட்டளையின் தலைவருமான எஸ்.பி அன்பரசனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மேலும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து பேசிய
மாணவி பூர்ணசுந்தரி, இது என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாளாக உள்ளது. ஒரு அமைச்சர் இவ்வளவு எளிமையாக இருப்பார் என்று என்னால் கனவிலும் நினைத்து பார்க்கமுடியவில்லை என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தமிழக உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ். பி வேலுமணி மாணவியிடம் கூறும்போது, இது உங்களின் உழைப்பிற்கும், முயற்சிக்கும் கிடைத்த வெற்றி, உங்களை போன்ற மாணவர்கள் இந்திய அளவில் மிகப்பெரிய பொறுப்புகளை அலங்கரிக்க வேண்டும்.

உங்களை போன்ற மாணவர்களுக்கு எப்போதும் உதவ தயாராக இருக்கின்றேன். நீங்கள் மற்ற மாணவர்களுக்கு முன் உதாரணமாகவும், உத்வேகமாகவும் திகழ்கின்றீர்கள், எல்லாவளமும் பெற்று வாழ்வில் சாதனை படைக்க வாழ்த்துக்கள் என தமிழக உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.