கோவை ஆட்சியர் அலுவலகம் 5வது நாளாக முற்றுகை : அரசு ஊழியர்கள் கைது!!

6 February 2021, 1:05 pm
Cbe Farmers - Updatenews360
Quick Share

கோவை : கோவை கலெக்டர் அலுவலகத்தை அரசு ஊழியர்கள் தொடர்ந்து 5-வது நாளாக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 2ம் தேதியிலிருந்து மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் 5வது நாளாக இன்றும் 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

Views: - 5

0

0