கோவையில் இதுவரை இல்லாத புதிய உச்சம்.! பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு.!!

14 August 2020, 8:11 pm
corona Cbe -Updatnews360
Quick Share

கோவை : கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 385 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இம்மாதம் துவக்கம் முதல் தற்போது வரை கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் மொத்தம் 3 ஆயிரத்து 215 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 385 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 274ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 6,048 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது, 2,062 பேர் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா காரணமாக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 52 வயது ஆண், 55 வயது ஆண், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 74 வயது ஆண், 60 வயது ஆண், 62 வயது பெண், 85 வயது மூதாட்டி, 56 வயது ஆண், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 76 வயது மூதாட்டி என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் கொரோனா தொற்றினால் சிகிச்சைப்பெற்று வந்த மொத்தம் 243 பேர் முழுமையாக குணமடைந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மேலும், இன்று விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்த 22 பேர், செல்வபுரம் நஞ்சப்பா கார்டன், எல்.ஐ.சி காலனி, ராமர்கோயில் வீதி, செல்வபுரம் ஹவுசிங்யூனிட், ராஜேஸ்வரி நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் 28 பேர், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 4 பேர், துடியலூரை சேர்ந்த 7 பேர், சவுரிபாளையத்தை சேர்ந்த 7 பேர், மதுக்கரையை சேர்ந்தவர்கள் 5 பேர் மற்றும் பீளமேடு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மொத்தம் 385 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இவர்கள், இ.எஸ்.ஐ மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் மேலும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 41

0

0