கோவையில் 468 பேருக்கு கொரோனா : ஒரே நாளில் 7 பேர் பலி!!

Author: Udayachandran
5 October 2020, 8:03 pm
Cbe Corona - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்டத்தில் இன்று 468 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மாநில சுகாதாரத் துறை சார்பில் இன்று வெளியிட்டபட்டியலில் கோவை மாவட்டத்தில் அன்னூர், மேட்டுப்பாளையம், காரமடை, பொள்ளாச்சி சூலூர், பீளமேடு, கணபதி, ராமநாதபுரம், உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர், குனியமுத்தூர், சரவணம்பட்டி, துடியலூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 468 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 558 ஆக உயர்ந்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 75 வயது மூதாட்டி, 62, 69 மற்றும் 78 வயது முதியவர்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 68 வயது மூதாட்டி, 49 வயது ஆண் மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 89 வயது முதியவர் என மொத்தம் 7 பேர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்னர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 460 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 29 ஆயிரத்து 199 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 890 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Views: - 51

0

0