கோவையில் கடந்த 8 நாட்களில் எத்தனை பேருக்கு கொரோனா? எத்தனை பேர் டிஸ்சார்ஜ்? : ஹாட்ஸ்பாட் பகுதிகள் எவை? – முழு விபரம்
8 September 2020, 1:08 pmகோவை : கோவையில் கடந்த 8 நாட்களாக கொரோனா வைரசால் தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது. இந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்டோ எத்தனை பேர்? சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை என்ன? உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் மற்றும் கொரோனா அதிகம் கண்டறியப்பட்ட பகுதிகள் எவை? உள்ளிட்ட விவரங்கள் இந்த செய்தியில் தொகுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் கோவையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் 300 என்ற எண்ணிக்கையில் தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இருந்து வந்த சூழலில், கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி முதல் பாதிப்பு எண்ணிக்கை 500ஐ கடந்து பதிவாகி வருகிறது.
கடந்த 8 நாட்களில் தினசரி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை :
1) ஆகஸ்ட் 31ம் தேதி : 589 பேர்
2) செப்டம்பர் 1ம் தேதி : 581 பேர்
3) செப்டம்பர் 2ம் தேதி : 579 பேர்
4) செப்டம்பர் 3ம் தேதி : 593 பேர்
5) செப்டம்பர் 4ம் தேதி : 595 பேர்
6) செப்டம்பர் 5ம் தேதி : 545 பேர்
7) செப்டம்பர் 6ம் தேதி : 538 பேர்
8) செப்டம்பர் 7ம் தேதி : 524 பேர்
அதன்படி, கடந்த 8 நாட்களில் மட்டும் கோவையில் 4 ஆயிரத்து 544 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 23.36 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், இந்த காலகட்டத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இது 11.44 சதவீதம் அதிகமாகும்.
அதே போல், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையும் இந்த 8 நாட்களில் அதிகரித்துள்ளது. 3 ஆயிரத்து 98 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இது 21.36 சதவீதம் அதிகமாகும்.
கோவை மாவட்டத்தில் இதுவரை 19 ஆயிரத்து 479 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 332 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் இது 1.7 சதவீதம் ஆகும். தற்போதுவரை 24.03 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 4 ஆயிரத்து 680 பேர்.
இதுவரை 14 ஆயிரத்து 497 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இது 74.42 சதவீதம் ஆகும்.
கோவை கடந்த 8 நாட்களில் பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்ட பகுதிகள் :
மேட்டுப்பாளையம் :165 பேர்
செல்வபுரம் : 130 பேர்
கணபதி : 126 பேர்
காரமடை : 97 பேர்
சிங்காநல்லூர் : 86 பேர்
சூலூர் : 85 பேர்
பொள்ளாச்சி : 84 பேர்
0
0