கோவையில் இன்று 167 பேருக்கு கொரோனா பாதிப்பு : ஒருவர் பலி!

2 August 2020, 7:17 pm
corona Cbe -Updatnews360
Quick Share

கோவை : கோவையில் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை செவிலியர் உள்பட167 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 37 வயது பெண் தலைமை செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்த நிலையில் சளி மதிரி எடுத்து பரிசோதனை செய்துள்ளார். இதில் தலைமை செவிலியருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. தலைமை செவிலியருடன் தொடர்புடைய அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது தவிர பொள்ளாச்சியில் 10 பேருக்கும், மேட்டுப்பாளையத்தில் 7 பேருக்கும், காரமடையில் 6 பெருக்கும், கணபதி, சரவணம்பட்டி, பீளமேட்டில் தலா 4 பேர் மற்றும் சூலூர், பி.என்.புதூர், வடவள்ளி, காந்திபுரம், மதுக்கரை, பேரூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 167 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,230ஆக உயர்ந்துள்ளது.

வைசியாள் வீதியை சேர்ந்த 60 வயது முதியவர் கொரோனா அறிகுறிகளுடன் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இங்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு மாற்ற திட்டமிட்டிருந்த நிலையில் முதியவர் நேற்று இரவு உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.