கோவையில் இன்று மேலும் 593 பேருக்கு கொரோனா : 3 பேர் பலி!!

3 September 2020, 7:25 pm
Corona Cbe - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் இன்று ஒரே நாளில் 593 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் 4வது நாளாக இன்றும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 500க்கும் அதிகமாக உள்ளது.

இதில் மேட்டுப்பாளையத்தில் 43 பேர், காரமடையில் 31 பேர், சூலூரில் 23 பேர், துடியலூரில் 19 பேர், பொள்ளாச்சியில் 12 பேர், மதுக்கரையில் 11 பேர், குனியமுத்தூரில் 10 பேர் உள்பட 593 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சமாகும். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 258 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதன்படி, கோவையில் இதுவரை வைரஸ் தொற்று தாக்குதலுக்கு உள்ளாகி 318 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், கோவையில் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 486 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

Views: - 0

0

0