கோவையில் 112 பேருக்கு கொரோனா உறுதி : 4 பேர் பலி

5 August 2020, 8:03 pm
coronavirus_tests_Updatenews360
Quick Share

கோவை: கோவையில் பெண் மருத்துவர் உள்பட 112 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 5 ஆயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது.

கோவை, ஜி.வி.ரெசிடென்சியை சேர்ந்த 41 வயது பெண் மருத்துவர், ரயில்வே குடியிருப்பை சேர்ந்த 70 வயது முதியவர், சூலூரை சேர்ந்த 8 பேர், குனியமுத்தூரை சேர்ந்த 5 பேர் ஆர்.எஸ்.புரம், ராமநாதபுரம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தலா 4 பேர் உள்பட 112 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது.

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 67 வயது மூதாட்டி, அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கோவையை சேர்ந்த 67, 70 வயது மூதாட்டி இருவர், மற்றும் 56 வயது ஆண் ஆகியோர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். அதன்படி, இன்று ஒரே நாளில் 3 பெண்கள், ஒரு ஆண் ஆகிய 4 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய்த் தொற்றுக்கு 79 ஆண்கள், 26 பெண்கள் சேர்த்து 105 பேர் உயிரிழந்துள்ளனர்.