கோவையில் மருத்துவ பணியாளர்கள் உட்பட 393 பேருக்கு கொரோனா..! : 10 பேர் பலி

17 August 2020, 8:41 pm
Delhi Corona- Updatenews360
Quick Share

கோவை: கோவையில் இன்று ஒரே நாளில் 393 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது.

கோவை அரசு மருத்துவமனையின் ஐ.எல்.ஐ., வார்டு, புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றி வருபவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது. அதன்படி இன்று 24, 27 வயது பெண்கள், 35 வயது ஆண் சேர்த்து 3 மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநகர காவல் பிரிவை சேர்ந்த 55 வயது காவலர், காட்டூர் தமிழ்நாடு காவலர் குடியிருப்பை சேர்ந்த 29 வயது ஆண் காவலர், பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்பை சேர்ந்த 47 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர செல்வபுரம் பகுதியில் 27 பேருக்கும் பி.என்.பாளையம் பகுதியில் 17 பேருக்கும், ரத்தினபுரி பகுதியில் 16 பேருக்கும், சூலூர் பகுதியில் 11 பேருக்கும், உக்கடம் மற்றும் கணபதியில் தலா 10 பேருகும் பீளமேட்டில் 9 பேருக்கும் என இன்று 393 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 362 ஆக உயர்ந்துள்ளது. மேலும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று 10 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி கோவையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 196 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 4

0

0