கோவையில் இன்று 394 பேருக்கு கொரோனா தொற்று : 16 பேர் உயிரிழப்பு

19 August 2020, 7:45 pm
Quick Share

கோவை: கோவையில் இன்று ஒரே நாளில் 394 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது.

கோவை மாவட்டம், காரமடை அருகே வாசனைத் திரவியம் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றி வந்த அலுவலக அதிகாரிக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். இங்கு மேற்கொண்ட பரிசோதனையில் இவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தொழிற்சாலையில் பணியாற்றிய வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 15 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர நரசீபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 23 வயது ஆண் ஆசிரியர், 48, 43, 54 வயது ஆண் காவலர்கள் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர செல்வபுரத்தை சேர்ந்த 29 பேர், காரமடையை சேர்ந்த 20 பேர், போத்தனூரை சேர்ந்த 19 பேர், ரத்தினபுரியை சேர்ந்த 15 பேர், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 14 பேர், சூலூரை சேர்ந்த 13 பேர், துடியலூரை சேர்ந்த 11 பேர், பொள்ளாச்சியை சேர்ந்த 10 பேர், ராமநாதபுரம், ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த தலா 9 பேர், பீளமேடு, மதுக்கரையை சேர்ந்த தலா 8 பேர்,

சிங்காநல்லூரை சேர்ந்த 7 பேர், குனியமுத்தூர், கணபதியை சேர்ந்த தலா 6 பேர் உள்பட 394 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 158 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, கோவையில் இதுவரை கோவையில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 25

0

0