கோவை மாநகராட்சி ஆணையர் இடமாற்றம் : புதிய ஆணையர் நியமனம்!!

30 August 2020, 10:18 am
Cbe Corp change - Updatenews360
Quick Share

கோவை : கோவை மா நகராட்சி ஆணையர் ஷரவன் குமார் ஜடாவத் வேளாண்துறை துணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கூடுதல் முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோவை மாநகராட்சி ஆணையராக பதவி வகித்து வந்த ஷர்வன்குமார் ஜடாவத் வேளாண்துறை துணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கோவை மாநகராட்சியின் புதிய ஆணையராக (பொறுப்பு) குமரவேல் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை பெரு நகரில் துணை ஆணையராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 83

0

0