தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தூய்மை பணி : மாநகராட்சி ஆணையர் ஆய்வு!!

7 September 2020, 3:46 pm
Coimbatore Corp Commissioner Inspection - updatenews360
Quick Share

கோவை : கோவை மாநகராட்சியில் தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் தூய்மைப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையார் குமாரவேல் பாண்டியன் இன்று ஆய்வு செய்தார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி கொண்டிருக்கும் நிலையில் கொரோனா தொற்று பரவுதலை தடுப்பதற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சுடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் கோவை மாநகாட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு பின்னர், அப்பகுதிகளில் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தினமும் காலை மாலை ஆகிய இருவேளைகளிலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு உரிய வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

Views: - 0

0

0