வெள்ளலூர் குப்பை கிடங்கில் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் மரம் நடும் விழா!!

Author: Babu
6 October 2020, 2:00 pm
Cbe tree planting - updatenews360
Quick Share

கோவை : சுற்றுச்சூழல் மாசுபடுதலை தவிர்க்கும் நடவடிக்கையாக வெள்ளலூர் குப்பை கிடங்கில் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் வேம்பு, அகில், புங்கன், அரசு, வாகை உள்பட 20க்கும் மேற்பட்ட வகையான நிழல் மற்றும சூழல் மாசுபாட்டை சீர் செய்யும் மரக்கன்றுகள் நடப்பட்டது. குப்பை கிடங்கு வளாகம் சுமார் 630 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பாதுகாப்பு கம்பி வேலி அமைத்து தினமும் தண்ணீர் ஊற்றி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் இதேபோல ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த மரக்கன்றுகள் நல்ல முறையில் வளர்ந்து அடர்த்தியான பசுமை பரப்பை ஏற்படுத்தியுள்ளது. குப்பை கிடங்கு வளாகம் முழுவதும் நீண்ட காலம் வளரும் மரக்கன்றுகளை நடவு செய்து பசுமை தோட்டம் ஏற்படுத்தி சுற்றுச்சூழல் மாசுபாட்டை சரி செய்ய ஒப்பந்ததாரர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.

குப்பை கிடங்கு வளாகத்தில் தானாக வளர்ந்துள்ள மரங்களையும் பராமரித்து தண்ணீர் ஊற்றி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் நடப்பாண்டில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்காக இலவச பல் மருத்துவ முகாம், இலவச கண் சிகிச்சை முகாம், நோட்டு மற்றும் கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

அதோடு, கோவை மாநகராட்சி பகுதி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் தயாராக இருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியன், துணை ஆணையர் மதுராந்தகி, கோவை மாநகராட்சி ஒப்பந்த தாரர்கள் நலச்சங்க தலைவர் ஆர். உதயகுமார், செயலாளர் கே. சந்திர பிரகாஷ், பொருளாளர் ஏ. அம்மாசையப்பன், துணை தலைவர் வி. ராஜகோபால், துணை செயலாளர் டி. மைக்கேல், துணை பொருளாளர் ஆர். செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 82

0

0