அதிக லாபம் தருவதாக கூறி ₹1 கோடி மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
கோவை பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ் பாண்டியன். இவர் பூஜை பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு வீரகேரள அருகே உள்ள ஆனந்த நகரைச் சேர்ந்த அப்பாவு என்ற விஜயகுமார். அவருடைய மனைவி பிரியதர்ஷினி ஆகியோர் அடிக்கடி வந்து பூஜை பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம்.
இதனால் இரண்டு பேரும் தமிழ் பாண்டியனிடம் நன்றாக பழகினார்கள். தினமும் பூஜை பொருள்கள் வாங்கி செல்வதால் அவர்களிடம் என்ன வேலை செய்கிறீர்கள் என்று அவர் கேட்டு உள்ளார்.
அதற்கு விஜயகுமார் தான் பல்வேறு பகுதிகளில் கடைகள் நடத்தி வருவதாகவும், தான் சாமியார் என்றும், தனக்கு கடவுள் பக்தி அதிகம் என்பதால் தினமும் கடைகளை திறந்ததும் பூஜை செய்வேன் என்பதால் பூஜை பொருட்கள் அதிகம் வாங்கி செல்வதாக கூறினார்.
இதன் காரணமாக தமிழ் பாண்டியன் அந்த தம்பதியினரிடம் சகஜமாக பழகினார். கடந்த 2021 ஆம் ஆண்டு கடைக்கு வந்த தம்பதியினர், தங்களுக்கு 10 க்கு மேற்பட்ட கடைகள் இருப்பதால் அதன் மூலம் தினமும் அதிக வருமானம் கிடைக்கிறது. எனவே நீங்கள் அதில் முதலீடு செய்தால் எவ்வளவு பணம் முதலீடு செய்வீர்களோ. அந்த பணத்துக்கு ஏற்ப லாபம் கொடுக்கிறோம் என்று ஆசை வார்த்தைகளை கூறி உள்ளனர்.
அதன்படி அவர் ரூபாய் 21 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்து உள்ளார். அப்பொழுது தம்பதியினர் வங்கியில் கொடுக்கும் லாபத்தை விட கூடுதலாக கொடுக்கிறோம் என்றும் கூறி உள்ளனர். அதன்படி அவர் முதலீடு செய்த பணத்துக்கு லாபமும் கொடுத்து உள்ளனர்.
பின்னர் அந்த தம்பதியினர் தமிழ் பாண்டியனிடம் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் யாராவது இருந்தால் முதலீடு செய்ய சொல்லுங்கள் என்று கூறி உள்ளனர்.
தனது நண்பர்களான ரஞ்சித், சோமசுந்தரம், சுரேஷ், பொன்னழகு, கண்ணன், பாலசுப்பிரமணியம், மருதபாண்டி, சிவா உட்பட 10 பேரிடம் கூறினார். உடனே அவர்களும் அந்த தம்பதியிடம் முதலீடு செய்தனர். அவர்களுக்கும் அந்த தம்பதியினர் ஓரிரு மாதங்கள் மட்டும் லாபத் தொகை கொடுத்ததாக தெரிகிறது.
பின்னர் கொடுக்கவில்லை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டும், நேரில் சென்று கேட்ட போதும் விரைவில் கொடுத்து விடுவதாக கூறினார். ஆனால் லாபத் தொகையை கொடுக்கவில்லை.
இதையும் படியுங்க: அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? புரிய வைப்போம் : த.வெ.க தலைவர் விஜய் கடிதம்!
பின்னர் தமிழ்பாண்டியன் மற்றும் பணம் கொடுத்த அனைவருக்கும் விஜயகுமார், பிரியதர்ஷினி தம்பதியினரை நேரில் சந்தித்து எங்களுக்கு லாபத் தொகை கொடுக்க வேண்டாம் நாங்கள் கொடுத்த ரூபாய் ஒரு கோடியே 2 லட்சத்தை திரும்பிக் கொடுங்கள் என்று கூறி உள்ளனர். அதற்கு தம்பதியினர் விரைவில் தந்து விடுவதாக கூறினர்.
ஆனால் சொன்னபடி பணத்தை கொடுக்கவில்லை அப்பொழுது தான் அவர்கள் தங்கள் மோசடி செய்யப்பட்டது அறிந்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் விஜயகுமார், பிரியதர்ஷினி தம்பதியினர் தமிழ் பாண்டியன் உள்பட பதினோரு பேரிடம் ரூபாய் ஒரு கோடியே 2 லட்சம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இதை அடுத்து தம்பதியினரை போலீசார் கைது செய்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.