நாட்டு வெடியை கடித்து வாய் சிதைந்த பசுமாடு.! சிகிச்சை பலனின்றி பலி.!!

16 August 2020, 11:11 am
Mtp Cow Dead - Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் பசுமாடு ஒன்று நாட்டு வெடிகுண்டை கடித்து வாய் முழுவதும் சிதைந்து உயிருக்கு போராடி வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

கோவை மேட்டுப்பாளையம் அடுத்த கல்லார் பகுதியில் காட்டு பன்றியை வேட்டையாட நாட்டு வெடி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்துல் காதர் என்பவருக்கு சொந்தமான பசு மாடு ஒன்று மேய்ச்சலுக்கு சென்றுள்ளது.

அப்போது பசுமாடு அங்கிருந்து நாட்டு வெடியை கடித்ததில் மாட்டின் தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் பசுவின் வாய் சிதைந்து அறுபட்டு நாக்கு தொங்கிய நிலையல் உயிருக்கு போராடி வந்தது. அதை கால்நடை மருத்துவர்கள் காப்பாற்ற முயற்சி செய்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பசுமாடு இறந்தது.

வனவிலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடியை கடித்து பசுமாடு இரறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் நாட்டு வெடி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.