கோவை சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாக குழுக்கூட்டத்தில் ரகளை : முறைகேடு குறித்து புகார் கூறிய வக்கீல் மீது சரமாரி தாக்குதல்..!!

19 July 2021, 2:41 pm
CSI Meeting Attacked- Updatenews360
Quick Share

கோவை : ரேஸ்கோர் அருகே சிஎஸ்ஐ திருமண்டத்தில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் முறைகேடு குறித்து புகார் தெரிவித்த வக்கீல் மீது சரமாரி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகம் உள்ளது. இதன் நிர்வாக குழு கூட்டம் இன்று அதே பகுதியில் உள்ள பிசப் அப்பாசாமி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

சிஎஸ்ஐ திருமண்டல ஆயர் திமோதி ரவீந்தர் தலைமையில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது நிர்வாகக் குழுவில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நிர்வாகக் குழு உறுப்பினர் வக்கீல் நேசமெர்லின் புகார் அளித்தார்.

அப்போது அங்கு இருதரப்பினர் இடையே வாக்குவாதம் எழுந்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு தரப்பினர் வக்கீல் நேச மெர்லின் மீது தாக்குதல் நடத்தியதாக
கூறப்படுகிறது.

இதில் தலை மற்றும் கை கால்களில் ரத்த காயங்களுடன் வக்கீல் நேச மெர்லின் கூட்டம் நடைபெற்ற இடத்தை விட்டு வெளியே ஓடிவந்தார். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 156

0

0