‘அவனவன் செத்துக்கிட்டு இருக்கான்..மாஸ்க் எங்க?’ : கடுப்பான மாவட்ட ஆட்சியர்!!

20 August 2020, 1:11 pm
Cbe Collector Angry- Updatenews360
Quick Share

கோவை : கோவையில் மாவட்ட ஆட்சியரிடம் மாஸ்க் அணியாமல் மனு அளிக்க வந்த நபரை பார்த்து மாவட்ட ஆட்சியர் கோப்பட்டு பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

சூலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கராசாமணி நேற்று, ஆய்வு செய்தார்.

அப்போது, பேருந்து நிலையத் திறப்பு விழா குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆட்சியரிடம், சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள விநாயகர் சிலை விவகாரம் தொடர்பான மனுவை, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மாணிக்கம் அளிக்க வந்தார்.

முககவசம் அணியாமல், மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவரிடம், முககவசம் எங்கே..? என ஆட்சியர் கேட்டார். அதற்கு, “காரில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்” என்று கூறி பதட்டமடைந்து வேட்டியால் முகத்தை மறைக்க முற்பட்டார்.

அதற்கு ஆட்சியர் , “மாஸ்கே போடாம வந்துருக்கீங்க.. அவனவன் செத்துட்டு இருக்கான கொரோனாவால, மாஸ்க் இல்லாம வர்ரீங்க்” என ஆட்சித்தலைவர் அவரை கண்டித்தார். அதை, தொடர்ந்து, அவர் முககவசத்தை அணிந்து வந்து, விநாயகர் சிலை அகற்றம் குறித்த மனுவை அளித்தார்.