தமிழகத்திலேயே அதிக மழைப் பொழிவை கண்டது கோவை: அதிகபட்ச மழை அளவு எவ்வளவு தெரியுமா?

Author: Aarthi Sivakumar
2 November 2021, 12:57 pm
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் இயல்பை காட்டிலும் 110 சதவீதம் கூடுதல் மழை பொழிவு கிடைத்துள்ளது.

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வழக்கமாக இந்த பருவத்தில் ஆகஸ்ட் மாதத்தில் சராசரியாக 168 மில்லி மீட்டர் மழை பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு 353.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது 110 சதவீதம் அதிகமாகும்.

இதனிடையே கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவை பேரிடர் மேலாண்மை துறையினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவு விவரம் பின்வருமாறு,

அன்னூர் 4 மில்லி மீட்டர், மேட்டுப்பாளையம் 29.1 மில்லி மீட்டர், சின்கோனா 3 மில்லி மீட்டர், சின்னக்கல்லார் 19 மில்லி மீட்டர், வால்பாறை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட பகுதிகள் 6 மில்லி மீட்டர், வால்பாறை தாலுக்கா 5 மில்லி மீட்டர், சோலையார் 10 மில்லி மீட்டர், ஆழியார் 11 மில்லி மீட்டர், பொள்ளாச்சி 35 மில்லி மீட்டர், கோவை தெற்கு 52 மில்லி மீட்டர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சுற்றுவட்டார பகுதிகளில் 51 மில்லிமீட்டர், கோவை விமான நிலையம் சுற்றுவட்டார பகுதிகளில் 26 மில்லி மீட்டர், பெரியநாயக்கன்பாளையம் 14.20 மில்லி மீட்டர் என மொத்தம் 300.3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மாவட்டத்தில் சராசரியாக நேற்று 21.45 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 577

0

0