கொரோனாவால் பலியான மருத்துவர்! கோவையில் சோகம்.!!

1 August 2020, 1:20 pm
Cbe Doctor Dead- Updatenews360
Quick Share

கோவை : கோவையில் நரம்பியல் மருத்துவத்தில் நீண்ட காலமாக பிரபலமாக இருந்து வந்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் பிரானேஷ் (வயது 83). நரம்பியல் துறை சிறப்பு நிபுணரான இவர் கோவையின் பிரபல மருத்துவமனைகளில் பணியாற்றி வந்தவர். மேலும் இவர் கோவை ராம் நகர் பகுதியில் தனியாக கிளினிக் ஒன்றும் வைத்து நடத்தி வந்தார்.

நரம்பியல் துறை மருத்துவத்தில் நீண்ட நாட்களாக சேவை செய்து கோவையில் பிரபலமடைந்தவர் இந்த மருத்துவர். இதற்காக இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். வயது முதிர்வின் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டும், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டும் அவர் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூத்த மருத்துவரின் மறைவுக்கு கோவையில் அனைத்து மருத்துவர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 9

0

0