வனத்தில் இருந்து வெளியேறிய யானைகள் : வாழைத் தோட்டத்தில் புகுந்து அட்டகாசம்!!

11 September 2020, 3:41 pm
Mtp Elephant- updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து வாழைகளை நாசம் செய்தது.

கோவை மாவட்டம் காரமடை வனச்சரக எல்லைக்குட்பட்ட கண்டியூர் வனப்பகுதியில் இருந்து நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் ஒரு ஆண் மற்றும் 2 பெண் காட்டு யானை வெளியேறியது.

கெம்மரம்பாளையம் சேர்ந்த திருமூர்த்தி என்பவர் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் தோட்டத்தில் 1,800 வாழைகள் வைத்து விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் காட்டுயானைகள் இரவது தோட்டத்திற்குள் புகுந்து 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியது.

இதுகுறித்து காரமடை வனத்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சேதமடைந்த வாழைகளைகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 8

0

0