தனது ஆசிரியரின் பெயரை மகனுக்கு சூட்டிய தந்தை! ஓர் நெகிழ்ச்சி சம்பவம்!!

23 August 2020, 5:06 pm
Teacher Name - Updatenews360
Quick Share

கோவை : தனது ஆசிரியர் மேல் இருந்த ஈர்ப்பால் தனது மகனுக்கு அதே பெயரை விவசாயி வைத்து அழைத்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ளது ஆதிமாதயனூர் கிராமம் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 45). இவர் 1994 மட்டும்1995 ஆம் ஆண்டில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.அதற்குமேல் அவரால் படிக்க இயலாத சூழ்நிலையால் அவர் அதற்குப் பின்பு கூலி வேலைக்கு சென்றுள்ளார்.

அவர் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது அவருக்கு தமிழ் பாடம் எடுத்த ஆசிரியரின் மேல் அதிகப்படியான ஈர்ப்பு இருந்த காரணத்தினால் தனக்கு பிறக்கும் குழந்தைக்கு இந்த ஆசிரியரின் பெயரை சூட்ட வேண்டுமென கருதியுள்ளார். பின்னர் அவருக்கு பிறந்தது முதல் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால இரண்டாவது குழந்தைக்கு அந்த ஆசிரியரின் பெயரான அருள் சிவா எனப் பெயர் சூட்டியுள்ளார்.

நாகராஜன் மகனை ஆதிமாதயனூர் அப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் சேர்த்துள்ளார். அங்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டும்தான் உள்ளது. மேல்படிப்புக்காக ஆறாம் வகுப்பு சேர்க்கைக்காக வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மகன் அருள் சிவாவை சேர்க்க தந்தை வந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த ஆசிரியர் அந்த மாணவனின் பெயரை கேட்டுள்ளார் அதற்கு அந்த மாணவன் தனது பெயர் அருள் சிவா என்று கூறியுள்ளார். அங்கிருந்த ஆசிரியர் நடராஜனிடம் இதுகுறித்து கேட்டபோது . தனக்கு பள்ளியில் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியராக இருந்த அருள் சிவா என்னும் வாத்தியாரின் ஞாபகமாக தனது மகனுக்கு இந்த பெயரை சூட்டி உள்ளேன் கூறியுள்ளார்

இதை அறிந்த தமிழாசிரியர் அருள் சிவா நாகராஜனை கட்டி அணைத்து உள்ளார் பின்னர் அந்த மாணவனின் கல்விச் செலவை அந்த ஆசிரியரை ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார். வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த 10, 11, 12ஆம் வகுப்பு தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0