கோவையில் களைகட்டிய கஞ்சா விற்பனை : பெண் உட்பட 11 பேர் அதிரடி கைது!!

4 November 2020, 11:09 am
Ganja - Updatenews360
Quick Share

கோவை: கோவை மாநகர பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாநகரின் வெவ்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார்கள் வந்த நிலையில் அவ்வப்போது கஞ்சா விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டு வந்தனர்.

இந்த சூழலில், கஞ்சா புழக்கத்தை முற்றிலும் ஒடுக்கும் விதமாக சோதனைகளை அதிகரித்து கஞ்சா சப்ளையர்களை கைது செய்ய மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் நேற்று போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த அயூப் (வயது 31), முஜிபுர் ரகுமான் (வயது 48), செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 23) ரத்னபுரியை சேர்ந்த கண்ணன் (வயது 20), புளியகுளம் பகுதியைச் சேர்ந்த புவனா (வயது 47), அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் (வயது 20), வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 35), பிள்ளையார் புரத்தைச் சேர்ந்த சதீஸ் (வயது 27) ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Views: - 332

0

0