கடைக்காரருக்கு டிமிக்கி கொடுத்து நகையுடன் ஓட்டம்… துரத்திப் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்த சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
7 July 2022, 4:48 pm
Quick Share

கோவை : பொள்ளாச்சியில் தனியாருக்கு சொந்தமான நகை கடையில், விற்பனையாளரை திசைதிருப்பி நகையை திருடிச் சென்ற மர்ம நபரை மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

கோவையை அடுத்துள்ள பொள்ளாச்சி கடைவீதியில் 500க்கும் மேற்பட்ட நகை கடைகள், நகை பட்டறைகள் உள்ளன. கடந்த 4ம் தேதி கடைவீதியில் உள்ள சுப்ப அண்ணன் ஜீவல்லரிக்கு வந்த மர்ம நபர், தனக்கு ஆரம் வேண்டும் என கடை உரிமையாளரிடம் தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து, நகை டிசைன்களை காண்பித்த பொழுது, வேற டிசைனை மர்ம நபர் கேட்டதால், அலமாரியில் இருக்கும் நகையை எடுக்க முயன்ற போது, மேசையின் மீது வைத்திருந்த 6 பவுன் நகையை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதனால், பதறிப்போன கடை உரிமையாளர் உதயகுமார், திருடி சென்ற நபரை துரத்திப் பிடிக்க முயற்சி செய்தபோது, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

அருகில் உள்ள நகை கடைகாரர்கள் காயம் அடைத்த நபரை பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொண்டு சேர்ந்தனர்.

இதையடுத்து, உதயகுமார் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில், பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி உத்தரவின்படி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமதாஸ் தலைமையில் போலீசார் நகை திருடி சென்ற நபரிடம் விசாரணை நடத்தினர். அதில், கேரள மாநிலத்தை சேர்ந்த அஜய் என்பது தெரிவந்தது.

அஜய்யிடம் 6 பவுன் நகையை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் கடைவீதியில் நகை திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 645

0

0