திறக்கப்பட்ட கோவை அரசு கலைக் கல்லூரி! 8 மாதங்களுக்கு பிறகு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கம்!

2 December 2020, 10:20 am
Cbe Govt College - Updatenews360
Quick Share

கோவை: கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த கோவை அரசு கலைக் கல்லூரி இன்று திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 8 மாதங்களாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

தொற்றின் வீரியம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் துவங்கியுள்ளது.

முதற்கட்டமாக அறிவியல் பாட துறைகளில் முதுகலை பயிலும் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் இன்று வகுப்புகள் துவங்குகிறது.

இதற்காக கல்லூரி உரிய பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டுள்ளது. கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் நுழையும் போதே தெர்மல் ஸ்கேனர் கொண்டு மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், சானிடைசர் பயன்படுத்திய பிறகே மாணவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். சமூக இடைவெளியை கடைபிடித்து வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களையும், வகுப்பறையையும் சந்திப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 86

0

0