கோவையில் வெளுத்து வாங்கிய கனமழை… சாலைகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் ; வாகன ஓட்டிகள் பெரும் அவதி..!!

Author: Babu Lakshmanan
10 May 2023, 9:41 pm
Quick Share

கோவை ; கோவையில் பெய்த கனமழையினால் சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் சரிந்து விழந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை முதலே மிக கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

குறிப்பாக கோவை மாநகரில் அவிநாசி சாலை மேம்பாலம், வடகோவை மேம்பாலம், லங்கா கார்னர், கிக்கானிக் பள்ளி அருகில் உள்ள மேம்பாலங்களுக்கு அடியில் மழைநீருடன் சேர்ந்து, சாக்கடை நீரும் தேங்கி நின்றதால் மேம்பாலங்களுக்கு அடியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே, கோவை ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டது. கோவையில் பல்வேறு இடங்களில் இதுபோன்று மரங்கள் சரிந்து விழுந்ததால், அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 302

0

0