இந்து முன்னணி பிரமுகர் கொலை : 100க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனத்தில் இறுதி ஊர்வலம்!!

14 September 2020, 12:46 pm
Hindu Munnani Murder- updatenews360
Quick Share

கோவை : காந்திபுரம் அருகே ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகரின் இறுதி ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திரண்டதால் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கோவையில் நேற்று காந்திபுரம் ராம் நகர் பகுதியில் சோடா கடை உரிமையாளர் பிஜு என்பவர் ஏழு பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை காண கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை வார்டிற்கு முன் 200க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.

இதனால் அவரது உடலானது அங்கேயே பார்வைக்காக வைக்கப்பட்டு கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மையானத்திற்கு எடுத்து செல்ல முடிவெடுக்கபட்ட நிலையில் பிஜு வின் இறுதி ஊர்வலத்தில் 100 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதனால் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து பாப்பநாயக்கன்பாளையம் வரை 200க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் அணிவகுத்து செல்ல முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை நீதிமன்ற வளாகம் முன்பு ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்த வாகனங்களை காவல்துறையினர் நிறுத்தி வைத்ததால் அவர்கள் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 4

0

0