எந்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு இடம் உள்ளது? – மாநகராட்சி புதிய அறிவிப்பு!

Author: Udayachandran
5 October 2020, 7:44 pm
Cbe Corporation- Updatenews360
Quick Share

கோவை : கோவையில் எந்தெந்த மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்த மருத்துவமனையில் எத்தனை இடங்கள் காலியாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் மாநகராட்சி புதிய இணையதள பக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதே நேரத்தில் போதிய படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படாததால் மட்டுமே அதிக அளவில் நோயாளிகளை அனுமதிக்க முடிவதில்லை என்றும் தனியார் மருத்துவமனைகள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை வழங்க ஒதுக்கப்பட்டுள்ள மொத்த படுக்கைகளின் விவரங்கள் மற்றும் தற்போது காலியாக உள்ள படுக்கைகளின் விவரங்களை உடனுக்குடன் பொதுமக்கள் அறிந்து கொள்ள மாநகராட்சி புதிய இணையதள பக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

www.kovaicare-ccmc.com என்ற வலைத்தளம் மூலமாக பொதுமக்கள் இந்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Views: - 53

0

0