கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவன், மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். இந்த நிலையில், இன்று கூட்டம் நடைபெற்ற போது, முருகேசன் என்பவர் தன் மனைவியுடன் கையில் டீசல் கேன் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசலை மேலே ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி மேலே தண்ணீரை ஊற்றி முருகேசன் மற்றும் அவரது மனைவியை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் முருகேசன் கூறுகையில், “கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறேன். தான் இருக்கும்போது இன்னொரு நபரை செயல் அலுவலர் கனகராஜ் பணிக்கு அமர்த்தி விட்டார்.
இதனால் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது, செயல் அலுவலர் கனகராஜ் தனது பணியை பிடுங்கிவிட்டார். கனகராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று தற்கொலை முயற்சி ஈடுபட்டதாக தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.