நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகும் தேசியக்கொடிகள்.!

8 August 2020, 3:31 pm
Cbe Indian Flag - Updatenews360
Quick Share

கோவை : சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடிகளை தயாரிக்கும் நெசவாளர்களுக்கு இந்த நேரத்தில் அனைவரும் உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆங்கிலேயே ஆட்சிக்குள் சிக்கியிருந்த இந்தியா சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. சுதந்திரம் பெற்ற பல ஆண்டுகள் ஆன போதிலும் இந்த தினத்தை கொண்டாட மக்கள் யாரும் தவறுவதில்லை.

ஆண்டுதோறும் இந்த நாளில், அவரவர் வீதிகளில், பொது இடங்களில் தேசிய கொடுயை ஏற்றியும், இனிப்புகளை வழங்கியும் இத்தினத்தை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர் பாரத தேசத்து மக்கள்.

அவ்வாறு, வரும் 15ம் தேது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான தேசிய கொடிகள் தயாரிக்கும் பணி கோவையில் துரித கதியில் நடைபெற்று வருகிறது.

பள்ளி, கல்லூரிகள் இல்லாத இந்த காலகட்டத்தில், கிடைக்கும் சொற்ப ஆர்டர்களை கொண்டு கொடிகளை தயாரித்து வருவதாகவும், அனைவரும் நெசவாளர்களுக்கு உதவ வேண்டும் என்கிறார் கொடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ராஜேந்திரன்.

கொரொனா அச்சுறுத்தல் வந்தபோதிலும் வற்றாத நாட்டுப்பற்றோடு தனிமனித இடைவெளியை கடைபிடித்து இந்த தினத்தை கொண்டாடுவோம் என்கின்றனர் பொதுமக்கள். எத்தனை இன்னல்கள் வந்தாலும் நாட்டின் மீதான அக்கறையும், பற்றும் மக்களுக்கு குறைவதே இல்லை என்பதற்கு உதராணமாக இருக்கின்றனர் இந்திய மக்கள்.

Views: - 28

0

0