சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய 3 பேர் கைது… 12 கிலோ கஞ்சா பறிமுதல்… தடுக்க முடியாத கஞ்சா கலாச்சாரம்..!!

Author: Babu Lakshmanan
6 July 2022, 8:18 pm
Arrest - Updatenews360
Quick Share

கோவை மாவட்டத்தில் 12 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன் அவர்கள் உத்தரவின் பெயரில், சட்டத்திற்கு விரோதமாக தடை செய்யப்பட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் இன்று கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, போதைப் பொருளான கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த சபிமுகமது (37), முருகன் (40) மற்றும் பிபின் பாரிக்(28) ஆகிய மூன்று நபர்களையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Views: - 80

0

0