உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கோவை குட்டீஸ்கள் : 12 மணி நேரத்தில் உலக சாதனைகளை நிகழ்த்தி ஆச்சரியம்..!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2021, 4:45 pm
Kids Record - Updatenews360
Quick Share

கோவை : 15 குழந்தைகள் 12 மணி நேரத்தில் வெவ்வேறு விதமான தனிநபர் உலக சாதனைகளை நிகழ்த்தி அசத்தியுள்ளனர்.

கோவை சாய்பாபா காலனியில் அமைந்துள்ள லிட்டில் இண்டிகோ கிட்ஸ் அகாடமியில் குழந்தைகளுக்கு கற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

2 வயது முதல் இங்கு குழந்தைகளுக்கு அவர்களது தனித்திறமைகளை மேம்படுத்த பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்று குழந்தைகள் வெவ்வேறு சாதனை முயற்சிகளை மேற்கொண்டனர்.

பரதநாட்டியத்தில் முத்திரைகளை காண்பித்தல், இசைக்கருவிகள், விளையாட்டு போட்டிகளின் பெயர்களை 5 நிமிடங்களுக்குள்ளாக கூறுதல் உள்ளிட்ட 15 வெவ்வேறு தலைப்புகளின் கீழ் சுட்டிக் குழந்தைகள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அசத்தியுள்ளனர்.

இதன் மூலம் இந்த குழந்தைகள் எலைட் புக் ஆஃப் ரெக்கார்ட்ய், ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்டு, தமிழன் புக் ஆஃப் ரெக்கார்டு, இந்தியன் ரெக்கார்ட் உள்ளிட்ட 4 உலக சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளனர்.

சின்னஞ்சிறு வயதில் சாதனைகளை நிகழ்த்திக்காட்டிய இந்த குழந்தைகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 153

0

0