தினசரி பாதிப்பிலும், பலி எண்ணிக்கையிலும் கோவை முன்னிலை : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2021, 8:23 pm
Corona Cbe - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 1,900க்கு கீழ் குறைந்துள்ளது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. ஆனால், கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்த நிலையில், இன்றும் 1,900க்கும் கீழான பாதிப்புகள் பதிவாகியுள்ளது. அதாவது, 1,807 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,48,497ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, கோவையில் இன்று 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 126 பேருக்கும், திருப்பூரில் 93 பேருக்கும், ஈரோட்டில் 130 பேருக்கும், சேலத்தில் 105 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,911 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,447 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 91 ஆயிரத்து 222ஆக அதிகரித்துள்ளது.

Views: - 235

0

0