டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… கோவையில் அதிகாலையில் நடந்த விபத்தால் பரபரப்பு..

Author: Babu Lakshmanan
7 July 2022, 12:38 pm
Quick Share

கோவையில் டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், சாலையில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

கோவை சுந்தராபுரம் குறிஞ்சி குளம் அருகே இன்று காலை உக்கடம் நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு டிப்பர் லாரியும் , சுந்தராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியது. அதிகாலை நேரத்தில் நடந்த இந்த சாலை விபத்தில் மண்ணுடன் வந்த டிப்பர் லாரி சாலையில் கவிழ்ந்தது.

இதில் லாரிகளில் பயணம் செய்த ஓட்டுனர்கள் மேகநாதன், செந்தில்குமார் ஆகிய இருவர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட லாரி ஓட்டுனர் மற்றும் கிளினர் ஆகியோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சாலையில் லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஜே.சி.பி இயந்திரம் மூலம் இரண்டு லாரிகளையும் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை போலீசார் சீர் செய்தனர்.

Views: - 140

0

0