தந்தையின் வாட்ஸ்அப்பிற்கு வந்த மகளின் நிர்வாணப் புகைப்படம் : காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் காதலன் வெறிச்செயல்..!!

3 November 2020, 12:41 pm
Quick Share

கோவை: காதலியின் நிர்வான புகைப்படங்களை அவரது தந்தைக்கு அனுப்பிய கோவையை சேர்ந்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வர்னா (22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் தேவேஷ்வர். இவர்கள் இருவரும் கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் சூழலில், இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே, மாணவியை கண்டித்ததோடு, இனிமேல் தேவேஷ்வரிடம் பேச்சுவார்த்தையே வைத்துக் கொள்ளக்கூடாது என்று மாணவியை கண்டித்துள்ளனர். இதனால், அந்த மாணவி தனது காதலன் தேவேஷ்வரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதன் காரணமாக, ஆத்திரமடைந்த தேவேஷவர், இருவரும் காதலித்த போது மாணவி அனுப்பிய நிர்வாண புகைப்படங்களை அவரது தந்தைக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை இதுகுறித்து மாணவியிடம் கேட்ட போது, காதலிக்கும் போது தனது போனை ஹேக் செய்து புகைப்படங்களை எடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாணவி குனியமுத்தூர் போலீசாரிடம் புகார் தெரிவித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மாணவனை கைது செய்துள்ளனர்.

காதலிக்கும் போது காதலர்கள் இருவரும் பரிமாறிக்கொள்ளும் அந்தரங்க புகைப்படங்கள் அவர்களது வாழ்கையையே புரட்டிப்போட்டுவிடும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

Views: - 74

0

0