கோவை மாநகராட்சி மேயர் அறிவிப்பு : முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வார்டில் இருந்து தேர்வான திமுக துணை மேயர் வேட்பாளர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2022, 1:17 pm
Cbe Mayor - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாநகராட்சி புதிய மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான வேட்பாளர்களை திமுக தலைமை அறிவித்துள்ளது.

கோவை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 19வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக மாமன்ற உறுப்பினர் கல்பனா மேயராகவும், 92வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட வெற்றிச்செல்வனை துணை மேயராகவும் திமுக தலைமை அறிவித்துள்ளது.

இதில் வெற்றிச்செல்வன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வார்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மதுரை, சேலம், ஈரோடு, தூத்துக்குடி மற்றும் சென்னை உட்பட பல்வேறு மாநகராட்சிகளுக்கான மேயர் மற்றும் துணை மேயர் பட்டியல்களையும், கூட்டணி கட்சிகளுக்கான பதவியிடங்களையும் திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Views: - 667

1

0