நீங்க வராதீங்க, நாங்களே வருகிறோம்..!வீடு தேடி சென்று கோவை மாநகர போலீசார் விசாரணை..!!

8 October 2020, 9:09 am
Quick Share

கோவை: கோவை மாநகர் போலீசார் பொதுமக்கள் புகார்களின் பேரில் வீடு தேடி சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகார் தர சென்றால் போலீசார் மதிப்பதில்லை விசாரிக்க வருவதில்லை போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதம் செய்கிறார்கள் என பொதுமக்கள் புலம்பி வந்த நிலையில் போலீஸ் இமேஜ் மாற்றும் வகையில் மக்களைத் தேடிச் செல்லும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவை உக்கடம் கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த 33 வயது தொழிலாளி ஒருவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளன. இவர் குடும்பத்தினரை கவனிக்காமல் கள்ளக்காதலுடன் ஜாலியாக சுற்றி வருவதாக அனைத்து மகளிர் போலீசில் புகார் தரப்பட்டது.


கோவை ஆர்.எஸ் புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரபாவதி நேரில் சென்று இருதரப்பினர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். குழந்தையில் வறுமையில் பசியில் இருக்கும் போது கள்ளக்காதல் தேவையா உங்கள் குடும்பத்தை யார் கவனிப்பது என இன்ஸ்பெக்டர் பிரபாவதி அறிவுரை கூறினார்.

இதை கேட்ட அந்த தொழிலாளி கள்ளக்காதல் மோகத்தில் குடும்பத்தை மறந்து விட்டேன். இனி நான் என் குடும்பத்துடன் நான் இருப்பேன் மனம் திருந்தி விட்டேன் காதலியைத் தேடிச் செல்ல மாட்டேன் என உறுதியளித்தார். இந்த நிலையில் பெண் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து மாநகர காவல் துறையை வெகுவாகப் பாராட்டினர்.

Views: - 35

0

0