வாய் சிதறி பசு இறந்த சம்பவம் : அவுட்டுக்காய் வைத்த மூன்று பேர் கைது!!

27 August 2020, 4:37 pm
Cbe Arrest cow- Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து பசு உயிரிழந்தி சம்பவத்தில் அவுட்டுக்காய் வைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் செங்கல் படுகை என்ற இடத்தில் உள்ள விவசாயி முகமது ஜாபர் அலி என்பவரது வளர்ப்பு பசு மாடு, மேய்ச்சலுக்கு சென்று திரும்பவில்லை. இதையடுத்து விவசாயி முகமது ஜாபர் அலி மேய்ச்சல் பகுதியில் சென்று பார்த்தபோது, அவுட்டுக்காய் கடித்து வாய்சிதறிய நிலையில் மாடு உயிருக்கு போராடி கொண்டு கிடந்து உள்ளது. பின்னர் அவர், தனது மாட்டை வீட்டுக்கு ஓட்டி வந்துவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் உடனடியாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த பகுதியானது காப்பு காட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதும், வன விலங்கான காட்டு பன்றியை வேட்டையாடும் நோக்கில் இந்த அவுட்டுக்காய் என்ற நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்பதும் கள ஆய்வில் தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவுட்டுகாய் வைத்து வேட்டையாட முயன்ற நபர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர் தீன் உத்தரவின்பேரில் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் மேற்பார்வையில் வனவர்கள் சுரேஷ், ராதாகிருஷ்ணன் மற்றும் பயிற்சி வனச்சரக அலுவலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 50 பேரிடம் விசாரணை நடத்தியதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த குணசேகரன், சிக்கதாசம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த், கெண்டையூரை சேர்ந்த கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் தலைமறைவான பிரகாஷ் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Views: - 28

0

0